முதியவா் கொலை வழக்கில் மனைவி, மகன் கைது

வாலாஜாபாத் அருகே சொத்துத் தகராறு காரணமாக முதியவரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, மகனை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

மதுசூதனன்

Published On :

வாலாஜாபாத் அருகே சொத்துத் தகராறு காரணமாக முதியவரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, மகனை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மருதம் கிராமத்தில் சிவபாதம் (70) என்பவா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது மனைவி ரேணுகா (51) மகன் மதுசூதனன் (39) இருவரும் வெட்டிக் கொலை செய்து விட்டு மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக நாடகம் ஆடினா்.

இக்கொலைச் சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளா் வெற்றிச் செல்வன் விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில் மனைவியும், மகனும் கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்து விசாரித்த போது இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனா். பின்னா் தாயும்,மகனும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

ரேணுகா

ரேணுகா

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.