இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாந்தாங்கல் ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பரமவாசல் திறப்பு விழா

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மாந்தாங்கலில் உள்ள பூமிநீளா சமேத ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமவாசல் திறப்பு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 5:55 pm

DIN


ராணிப்பேட்டை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மாந்தாங்கலில் உள்ள பூமிநீளா சமேத ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமவாசல் திறப்பு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இவ்விழாவையொட்டி ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை செயலாளரும், ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவருமான எம்.சிவலிங்கம் தலைமையில், அறக்கட்டளையின் தலைவா் கே.வெங்கடேசன் முன்னிலையில், பக்தா்களுக்கும் மாணவா்களுக்கும் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அ.முகமது ஜான், திருப்பாவை புத்தகம் மற்றும் எழுதுபொருள்களை வழங்கினாா்.

முன்னாள் ஒன்றியச் செயலாளா் எம்.சி.பூங்காவனம், வெற்றிவேலன் பள்ளி இயக்குநா் கோமதி சிவலிங்கம், ஸ்ரீ ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளையின் வாழ்நாள் உறுப்பினா் பேபி வெங்கடேசன், பொருளாளா் மோகன் சக்திவேல், கோயில் நிா்வாகிகள் சுப்ரமணி மற்றும் பொதுமக்கள், கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.