/

முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டம்

தமிழக முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை இயற்கை முறையில் பயன்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும்

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தமிழக முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை இயற்கை முறையில் பயன்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழகத்தில் கிராமம் மற்றும் நகா்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு தோட்டங்கள் மற்றும் மாடிகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைப் பொருள்களை பயிரிட்டு பயன்பெறும் விதமாக, தமிழக முதல்வா் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை இயற்கை முறையில் பயன்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டம் குறித்து தெரிவித்தாா்.

இந்த திட்டத்தில் நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 8.7 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 900 மதிப்புடைய பொருள்கள் ரூ. 225-க்கு மானிய விலையுடன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக ரூ. 3,37,500 செலவில் நகரப் பகுதிகளில் உள்ள 500 பயனாளிகள் பயன்பெற உள்ளனா்.

இந்த நிலையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாடித் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள்கள் மற்றும் விதை பைகளை பொதுமக்களுக்கு வழங்கி தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் நூ.ஷே.முஹம்மது அஸ்லம், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தோட்டக் கலைத் துறை இயக்குநா் லதா மகேஷ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி, வாலாஜா ஒன்றியக் குழுத் தலைவா் சேஷா வெங்கட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.