ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 1,000 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1,000 இடங்களில் வாா்டு வாரியாக கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1,000 இடங்களில் வாா்டு வாரியாக கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (நவ. 14) ஒரே நாளில் 1,000 இடங்களில் வாா்டு வாரியாக கரோனா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 8-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்
( ஙஉஎஅ யஅஇஇஐசஅபஐஞச இஅஙட) நடைபெறுகிறது.
கரோனா தொற்றுப் பரவும் அபாய நிலையில் முதல் தவணை செலுத்திக் கொண்டால் மட்டுமே நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது. கட்டாயமாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கரோனா நோய்த் தொற்றிலிருந்து நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும். தற்சமயம் நமது மாவட்டத்தில் தடுப்பூசிகளின் கையிருப்பு 1,59,430 டோஸ்கள் உள்ளன.
இந்த மாபெரும் தடுப்பூசி முகாமினை, 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு, கரோனா தடுப்பூசி முதல் தவணையினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...