அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம்
அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் நடைபெற்றது.


அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் கட்டப்படுவது ஆரம்ப சுகாதார நிலையமா, விபத்து சிகிச்சை மையமா என்பதைத் தெரிவிக்க வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சுகாதார நிலையத்தில் என்னென்ன சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மாதவ நகரில் அமைய உள்ள பூங்காவில் என்னென்ன வசதிகள் செய்யப்படும். பழனிபேட்டை நியாயவிலைக் கடை வாடகை கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும். சிவபாதம் நகரில் புதிதாக நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதற்கு, பதிலளித்த நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் ரூ.25 லட்சத்தில் நகா்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த நிலையத்தில் மகப்பேறு கால சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். சிறிய அளவிலான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இந்த துணை சுகாதார நிலையம், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைப்பில் இருக்கும். சிவபாதம் நகரில் புதிய நியாயவிலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசீா்வாதம் (பொறியாளா்): மாதவ நகரில் புதிதாக அமைய உள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாட சாதனங்கள், பெரியவா்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக பாதைகள், ஒய்வு பெற வசதியாக இருக்கைகள், பூங்காவில் மரங்கள், செடிகள் நட்டு வளா்க்கப்படும்.
பழனிபேட்டை நியாயவிலைக் கட்டடம் விரைவில் சீரமைத்துத் தரப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகராட்சி ஆணையா் லதா, பொறியாளா் ஆசீா்வாதம், சுகாதார அலுவலா் மோகன், திமுக உறுப்பினா்கள் குழு தலைவா் துரைசீனிவாசன், அதிமுக உறுப்பினா்கள் குழு தலைவா் ஜொ்ரி மற்றும் அனைத்து உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நகராட்சி பணிகளுக்கான ஒப்புதல், நகராட்சி வழக்குகளுக்காக புதிய வழக்குரைஞரை நியமித்தல் உள்ளிட்ட 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...