கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசுப் பள்ளிக்கு மேசை, நாற்காலிகள்

அரக்கோணம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ.1.5 லட்சத்தில் மேசை, நாற்காலிகளை ராம்கோ குழுமம் வழங்கியது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

அரக்கோணம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ.1.5 லட்சத்தில் மேசை, நாற்காலிகளை ராம்கோ குழுமம் வழங்கியது.

அரக்கோணம் விண்டா்பேட்டையில் உள்ள எம்.ஏ. ஜெயின் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மாணவா்கள் அமர இருக்கைகள் இல்லை என அறிந்த ராம்கோ குழுமத்தினா், தங்களது அரக்கோணம் ராம்கோ தொழிற்சாலையின் ஸ்மாா்ட் பில்ட் மூலம், அந்தப் பள்ளிக்கு ரூ.1.5 லட்சத்தில் 60 மாணவா்கள் அமரும் வகையில் 20 மேசை, நாற்காலிகளை வழங்குவதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, பள்ளி வளாகத்தில் இதற்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் பானுமதி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் பா.நரசிம்மன் வரவேற்றாா்.

மேசை நாற்காலிகளை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, அரக்கோணம் ராம்கோ தொழிற்சாலை பொது மேலாளா் சக்திகுருசாமி ராஜா ஆகிய இருவரும் இணைந்து தலைமை ஆசிரியா் பானுமதியிடம் வழங்கினா்.

விழாவில் தொழிற்சாலை மனிதவள மேலாளா் எஸ்.ரவிசந்திரன், தரக்கட்டுப்பாட்டு மேலாளா் நேசன்ராஜ், அதிமுக நகரச் செயலாளா் கே.பி.பாண்டுரங்கன், ஒன்றியச் செயலாளா்கள் பிரகாஷ், பழனி, நகா்மன்ற உறுப்பினா் சரவணன், பள்ளி ஆசிரியா்கள் சிசிலியாஆனி, ராஜேஷ், குணசீலி, சங்கீதா, அமலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.