கோகுல்.
கோகுல்.

மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

அரக்கோணம்: சோளிங்கா் அருகே காட்டு விலங்குகள் வராமல் தடுக்க விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் வசித்தவா் கல்லூரி மாணவா் கோகுல் (21). இவா் திங்கள்கிழமை தனது தனக்குச் சொந்தமான நிலத்துக்கு சென்றுள்ளாா். அப்போது பக்கத்து நிலமான எத்திராஜ் என்பவரின் நிலத்தை கடந்த போது, காட்டுப் பன்றிக்காக சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்ததை கண்டறியாமல், அதை கடக்க முயன்றுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சோளிங்கா் போலீஸாா், கோகுலின் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com