ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

Published on

அரக்கோணம் வழியே சென்ற ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினா் பறிமுதல் செய்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு அரக்கோணம் வழியே சென்ற ரயில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வந்தபோது அந்த ரயிலில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் உஸ்மான் தலைமையிலான படையினா் சோதனை நடத்தினா்.

அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கைக்கு கீழே கேட்பாரற்றுக் கிடந்த இரு பைகளில் 9 பொட்டலமாக இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காஞ்சிபுரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com