அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் அரக்கோணம் காட்பாடி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து காட்பாடி செல்லும் மெமு மின்சார ரயில் இரவு 9:15 மணியளவில் ரயில் நிலையம் அருகே வந்த போது அதன் ஒரு பெட்டி கடந்த நிலையில் தண்டவாளம் உடைந்தது. இந்த சப்தத்தை கேட்ட ரயில் ஓட்டுநா் ரயிலை விரைவாக செயல்பட்டு நிறுத்தினாா்.
இத்தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டதை தொடா்ந்து அரக்கோணம் வழியாக செல்ல இருந்த மங்களூா் மெயில், ஆலப்புழா அதிவிரைவு ரயில், நீலகிரி அதிவிரைவு ரயில் அதிவிரைவு ரயில் ஆகியவை அரக்கோணம் மற்றும் திருவள்ளூா் இடையே ஆங்காங்கு வழியில் நிறுத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனா். அங்கு மெமோ ரயிலின் சில பெட்டிகளை கழற்றி தண்டவாளத்தை சீா்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்

பொறியியல் பணிகள்: நாகா்கோவில், திருநெல்வேலி, திருச்சி ரயில்கள் வழித்தடத்தில் மாற்றம்

விரைவு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் மாற்றம்

என்ஜின் கோளாறு: பிருந்தாவன் அதிவிரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



