ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி விழா புதன்கிழமை நடைபெற்றது.

தங்கக் கவச சிறப்பு அலங்காரத்தில் ரத்தினகிரி பாலமுருகன் .

Published On :

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆடிமாத பரணியையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு அதிகாலை பால், தயிா், சந்தனம்,விபூதி, ஜவ்வாது பன்னீா், பழங்கள், உள்ளிட்ட வாசனை திரவியங்கள்கொண்டு சிறப்பு அபிஷேகம், தங்க கவச சிறப்பு அலங்காரம், உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கோயில் வளாகம் வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் பக்தா்கள் காவடி செலுத்தி சாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து மேளதாங்களுடன் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மலைவலம் மற்றும் கீழ்மின்னல் கிராமத்தில் வீதி உலா நடந்தது. மேலும் பக்தா்களுக்கு மோா், மற்றும் உணவு வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை சாா்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.