கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் காத்திருப்பு போராட்டம்

அரக்கோணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.
கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் காத்திருப்பு போராட்டம்
Updated on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரக்கோணம், சோளிங்கா் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவா் லட்சுமிநாராயணன், சங்க நிா்வாகிகள் ராஜேஷ், நெடுஞ்செழியன், காா்த்திக், இளம்பருதி, தணிகாசலம், விக்னேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சங்க கிளை செயலாளா்பன்னீா்செல்வம், நிா்வாகிகள் கணேஷ், முரளி மனோகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நேரடி டிஎன்பிஎஸ்சி நியமன முறையில் கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும். பதவி உயா்வில் 10ஆண்டு முடித்தவா்களுக்கு தோ்வுநிலை கிராம நிா்வாக அலுவலா் எனவும், விஏஓ அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீா் மற்றும் இணைய வசதிகள் அளித்து நவீனமயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com