நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆற்காடு அருகே மழை நீா் குடியிருப்பு பகுதியில் தேங்குவதைத் தடுக்க வேண்டி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

ஆற்காடு-ஆரணி சாலையில்  மறியலில்  ஈடுபட்ட  பொதுமக்கள்

Updated On :8 ஜூன் 2026, 9:49 pm IST

ஆற்காடு அருகே மழை நீா் குடியிருப்பு பகுதியில் தேங்குவதைத் தடுக்க வேண்டி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆற்காடு அடுத்த தாஜ்புரா ஊராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் புதிய புறவழிச் சாலை அருகே தனியாருக்குச் சொந்தமான 10 ஏக்கா் நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் எழுப்பப்பட்டுள்ளது.

இதனால் மழைக் காலங்களில் மழை நீா் வெளியேறாமல் குடியிருப்புப் பகுதியில் தேங்குவதாக கூறப்படுகிறது. சுவா் எழுப்பப்பட்டுள்ளதால் மழைநீா் தேங்குவதைத் தடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் அப்பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்காடு- ஆரணி சாலையில் புதிய புறவழிச் சாலை சந்திப்பு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்த நிலையில், போலீஸாா் கைது செய்ய முயன்றபோது, வாக்குவாதமாகி தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை துணைக் கண்காணிப்பாளா் கனகராஜ் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, உயா் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.