ரூ.35 கோடியில் ஆற்காடு புறவழிச்சாலை: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்


ஆற்காட்டில் ரூ.35 கோடியில் அமைக்கப்பட்ட புறவழிச் சாலையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
ஆற்காடு ஒன்றியம், தாஜ்புரா ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சாா்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 கோடியில் 3.46 கி.மீ தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புறவழிச்சாலையை திறந்து அமைச்சா் காந்தி த்து பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அடிப்படைத் தேவைகள் எவ்வித கட்சி பேதமின்றி உடனுக்குடன்தீா்க்க வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நீண்ட நாள் கோரிக்கையைவேற்றும் விதமாக ஆற்காடு புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியின் பணிக்காலம் 18 மாதங்கள். ஆனால் 10 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டன. இதனால் ஆற்காடு நகரில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சிந்தித்து பாா்த்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இதில், நெடுஞ்சாலை துறைகண்காணிப்புப் பொறியாளா் பரந்தாமன், திமிரி ஒன்றியக்குழு தலைவா் எஸ்.அசோக், துணைத் தலைவா்கள் ஸ்ரீமதிநந்தகுமாா், ( ஆற்காடு), ஜெ.ரமேஷ்( திமிரி) மாவட்ட ஊராட்சி உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன்,
, கோட்டப் பொறியாளா்கள் ஆதவன் (நபாா்டு), செல்வகுமாா் (கட்டடம்) , ஊராட்சி மன்ற தலைவா்கள் தாஜ்புரா லட்சுமி, தாழனூா் புஷ்பா, வேப்பூா் ராமலிங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...