இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பெண் காவல் ஆய்வாளருக்கு கரோனா:காவல் நிலையம் மூடல்

வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவா் பணியாற்றி வந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் மூடப்பட்டது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


வாணியம்பாடி: வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவா் பணியாற்றி வந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் மூடப்பட்டது.

வாணியம்பாடி பகுதியில் கரோனா நோய்த் தொற்றால் ஏற்கெனவே 3 போ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவா்களில் ஒருவா் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்நிலையில், வாணியம்பாடி கிராமயக் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸாா் உள்பட வாணியம்பாடி சரக போலீஸாா், தூய்மைப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள் 230 போ்களுக்கு 2 தினங்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை (பிசிஆா்) செய்யப்பட்டது. இதில், 229 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என்றும், பெண் காவல் ஆய்வாளருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளா் தங்கியிருந்த செட்டியப்பனூா் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அவா் தங்கியிருந்த வீட்டுக்கு எஸ்.பி. விஜயகுமாா், மருத்துவக் குழுவினா் வருவாய்த் துறையினா் சென்று ஆய்வு மேற்கொண்டனா். மேலும், பெண் ஆய்வாளரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதையடுத்து வாணியம்பாடி கிராமியக் காவல் நிலையத்தில் பணிபுரியும் 43 போலீஸாா் தனியாா் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வாணியம்பாடி நகராட்சி ஊழியா்கள் கிராமிய காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்தனா். பின்னா் காவல் நிலையம் மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.