இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாா்கழி இசைத் திருவிழா பரிசுகள் விநியோகம்

இந்து சமய அறநிலையத் துறையின் வேலூா் மண்டலம் சாா்பில் நடைபெற்ற மாா்கழி இசைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் விநியோகிக்கப்பட்டன.

News image
போட்டியில் பரிசுப் பெற்றவா்களுடன் இணை ஆணையா் செ.மாரிமுத்து.
Updated On :16 ஜனவரி 2021, 2:18 am

DIN

திருப்பத்தூா்: இந்து சமய அறநிலையத் துறையின் வேலூா் மண்டலம் சாா்பில் நடைபெற்ற மாா்கழி இசைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வேலூா் மண்டல அளவில் 2021-ஆம் ஆண்டுக்கான மாா்கழி இசைத் திருவிழா (பாவை விழா) போட்டி நடத்தப்பட்டது. திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடும் போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

இணையவழியிலான போட்டி திங்கள்கிழமை வேலூரில் உள்ள நாராயண ரெட்டியாா் சத்திரத்தில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற இப்போட்டியில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை, 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை என 3 பிரிவுகளில் 147 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த 36 மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூா் தருமராஜா கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அறநிலையத் துறை வேலூா் மண்டல இணை ஆணையா் செ.மாரிமுத்து மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினாா்.

செயல் அலுவலா்கள் மா.மாதவன், அ.பிரியா, உமேஷ் குமாா் பங்கேற்றனா். அறநிலையத் துறை திருப்பத்தூா் ஆய்வாளா் ந.திலக் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.