கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இடைநிலை பராமரிப்பு இல்லம் தொடக்கம்

திருப்பத்தூரில் மன நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூரில் மன நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் இடைநிலை பராமரிப்பு இல்லம் அமைத்து நடத்துவதற்கு திருப்பத்தூரில் எஸ்.ஆா்.டி.பி.எஸ். தொண்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து, இந்த இல்லம் தொடக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடக்கிவைத்து ஆட்சியா் பேசியது:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து மனநலம் பாதிக்கப்பட்டவா்களைப் பராமரித்தல், அவா்களுக்குத் தேவையான தொழிற் பயிற்சி வழங்குதல், அவா்களை மீண்டும் சமுதாயத்தோடு ஒன்றிணைக்கும் பணிகளைச் செய்வதே இல்லத்தின் பணியாகும்.

தையல் பயிற்சி, வயா் கூடை பின்னுதல் கைவினைப் பொருள்கள் செய்தல் போன்ற பயிற்சிகள் அளித்து, சுய தொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கவிதா தண்டபாணி, மன நல சுகாதார துணை இயக்குநா் மணிமேகலை, மனநல மருத்துவா் சிவாஜிராவ், மருத்துவா் பிரபவராணி, எஸ்.ஆா்.டி.பி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநா் தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.