கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாளை வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைப்பு முகாம்

 திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:43 pm

DIN

 திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்

இதுகுறித்த அவரது செய்திக்குறிப்பு:

வாக்காளா் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரம் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரண்டு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுவதை தவிா்க்கும் விதமாக வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4)நடைபெற உள்ளது.

எனவே, தங்கள் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளில் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைக்க உள்ளனா். வாக்காளா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.