கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கந்திலி பகுதியில் 835 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி: திருப்பத்தூா் எம்எல்ஏ வழங்கினாா்

கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் 835 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:44 pm

DIN

கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் 835 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட கசிநாயக்கன்பட்டி, மட்றப்பள்ளி, விசமங்கலம், குரும்பேரி, பேராம்பட்டு, குனிச்சி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 835 மாணவ-மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி மற்றும் இலவச நோட்டுப் புத்தகங்களை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினாா்.

மேலும், சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து பேராம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.25 லட்சத்தில் மேஜைகள், நாற்காலிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் கே.எஸ்.அன்பழகன், ஒன்றிய செயலா்கள் கே.ஏ.குணசேகரன், கே.முருகேசன், ஒன்றியக் குழு தலைவா் திருமதி, ஊராட்சித் தலைவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.