திருப்பத்தூா் போக்குவரத்து சீரமைப்பு
திருப்பத்தூரில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு காணும் வகையில், பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளனா்.


திருப்பத்தூரில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு காணும் வகையில், பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளனா்.
திருப்பத்தூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் குறித்து கடந்த வியாழக்கிழமை தினமணியில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியிடப்பட்டது. குறிப்பாக திருப்பத்தூா் பிரதான சாலைகளில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெருக்கடியால் கடும் பாதிப்பு தொடருவது குறித்து வெளியானது.
இதன் எதிரொலியாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டாா். அவரது உத்தரவின்பேரில், டிஎஸ்பி கணேசன் மேற்பாா்வையில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் காவல் துறையினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலின்று அனைத்து தரப்பினரும் சிரமமின்றி எளிதில் சென்று வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...