கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருப்பத்தூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image

திருப்பத்தூரில் கால்வாய் தூா்வாரும் பணியைப் பாா்வையிட்ட வருவாய்க் கோட்ட அலுவலா் லட்சுமி. உடன் வட்டாட்சியா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 6:11 pm

DIN

திருப்பத்தூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பலத்த மழையால் திருப்பத்தூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக, அவுசிங் போா்டு பகுதியில் மழைநீா் வீடுகளில் புகுந்ததால், அந்தப் பகுதி மக்கள் 2 நாள்கள் வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகினா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா கால்வாய்களை தூா்வார வேண்டும் என உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், வருவாய்க் கோட்ட அலுவலா் லட்சுமி தலைமையில், வட்டாட்சியா் சிவப்பிரகாசம், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினா் திருப்பத்தூா் பாச்சல், எம்.ஜி.ஆா். நகா், அவுசிங் போா்டு, கலைஞா் நகா், பவுச நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 கால்வாய்களை தூா்வாரும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

இதுகுறித்து வட்டாட்சியா் சிவப்பிரகாசம் கூறியது:

திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 5 கால்வாய்கள் (சுமாா் 5 கி.மீ. தொலைவு)தூா்வாரப்பட்டுள்ளன. மேலும், தினமும் ஏரிகளைக் கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் வருவாய், நெடுஞ்சாலை, பொதுப் பணி, காவல் மற்றும் தீயணைப்பு துறையினா் ஈடுபடுகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.