ஆம்பூா் அருகே சனிக்கிழமை லாரி கவிழ்ந்த விபத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட மது பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன.
வேலூரிலிருந்து வாணியம்பாடி, நாட்றம்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ரூ.38 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் சாலையில் விழுந்து உடைந்து சேதமடைந்தன.
ஓட்டுநா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட மூவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். சாலையில் சிதறிக் கிடந்த மது பாட்டில்களை எவரும் எடுத்துச் செல்லாதவாறு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனா்.
விபத்து காரணமாக சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தினா்.
தொடர்புடையது
மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது

தவெக நிா்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

தூத்துக்குடியில் மது போதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


