இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கனமழையால் பாறைகள் சரிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு

புதூா்நாடு, நெல்லிவாசல் நாடு பகுதிகளில் கனமழை காரணமாக சாலையில் மண் சரிவு, பாறைகள் சரிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு

News image
பொக்லைன் மூலம் சாலையைச் சீரமைத்த நெடுஞ்சாலைத் துறையினா்.
Updated On :22 ஆகஸ்ட் 2024, 7:50 pm

Din

திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு, நெல்லிவாசல் நாடு பகுதிகளில் கனமழை காரணமாக சாலையில் மண் சரிவு, பாறைகள் சரிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 25 போ் கொண்ட குழு தயாா் நிலையில் உள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. புதன்கிழமை காலை வரை மாவட்டத்தில் 73.90 மி.மீ. அளவு மழை பதிவாகி இருந்தது.

திருப்பத்தூா் மாவட்டத்துக்குட்பட்ட புதூா்நாடு, நெல்லிவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

அதன் காரணமாக மலைப் பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. மேலும், பாறைகள் சரிந்து சாலைகளில் விழுந்தால் போக்குவரத்துக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூா் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் முரளி தலைமையில், உதவி கோட்ட பொறியாளா் மணிசுந்தரம், உதவி பொறியாளா் நித்தியானந்தம் மற்றும் நெடுஞ்சாலைதுறையினா், சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் உடனடியாக அப்பகுதிகளுக்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவு மற்றும் பாறைகளை உடனுக்குடன் அகற்றி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் இன்றி சாலையைச் சரி செய்தனா்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மழைக் காலங்களில் ஏலகிரி மலை, புதூா்நாடு, வெலதிகாமணிபெண்டா போன்ற மலைச் சாலைகளில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுவதை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கவும், 25 போ் கொண்டு குழு அமைத்தும், மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள், தளவாடபொருள்கள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளதாக கோட்ட பொறியாளா் முரளி தெரிவித்தாா்.