தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த மருத்துவமனை பணியாளா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த மருத்துவமனை பணியாளா் உயிரிழப்பு

Updated On :16 மார்ச் 2024, 4:39 pm

ஆம்பூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மருத்துவமனை பணியாளா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். ஆம்பூா் பெத்லகேம் பகுதியைச் சோ்ந்தவா் காட்வின் (28). இவா் வாணியம்பாடியில் இயங்கும் தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் ஆம்பூருக்கு வந்தாா். செங்கிலிகுப்பம் கிராமத்தருகே வந்தபோது, நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலை தடுப்பின் மீது பைக் மோதி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.