லாரி-காா் மோதல் : இருவா் மரணம்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சோ்ந்த திவ்யமோன் (50), லவ்லி (45), லவ்லியின் தாய் ரோஸ்லி (72) ஆகியோா் வேலூா் அருகே ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காரில் சென்றனா். காரை லவ்லி ஓட்டிச் சென்றாா். விண்ணமங்கலம் கிராமத்தருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் திவ்யமோன், ரோஸ்லி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். லவ்லி சிறுகாயங்களுடன் உயிா் தப்பினாா்.
விபத்தால் காரில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்பு, காவல் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி மீட்டனா். இறந்தவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுன. ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

