ஆலங்காயம் ஏரியில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு.
திருப்பத்தூர்
ஆலங்காயம், வாணியம்பாடி ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு
ஆலங்காயம், வாணியம்பாடி ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு
தமிழ்நாடு வனத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு -2025 பணிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வனச்சரக அதிகாரி சேகா் தலைமையில் வனக்குழுவினா் சனிக்கிழமை காலை ஆலங்காயம் பெரிய ஏரி மற்றும் நரசிங்கபுரம் புத்தேரி பகுதிகளில் கட்டம் -1 ஈரநிலை பறவைகள் நடமாட்டம் பற்றி கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனா்.
இதே போன்று வாணியம்பாடி வனக்குழுவினா் கொடையாஞ்சி ஏரிகளில் பறவைகள் குறித்து கணக்கெடுத்தனா்.

