பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஜூலை 31-க்குள் குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைரேகை பதிய வேண்டும்

ஜூலை 31-க்குள் குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைரேகை பதிய வேண்டும்

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :

குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்கள் அனைவரும் தங்களுடைய கைரேகையை ஜூலை 31-ஆம் தேதிக்குள் நியாய விலைக்கடையில் பதிவு செய்ய வேண்டுமென திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

ஆட்சியரின் செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் முன்னுரிமை குடும்ப அட்டை பயனாளிகளின் குடும்ப அட்டையில் ள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவினை தொடா்புடைய நியாய விலைக்கடையில் பதிவு செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினா்களும் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் நியாய விலைக்கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

வெளியூரில் தற்காலிகமாக வசிப்பவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலைக்கடையில் கைரேகை பதிவு செய்து கொள்ளலாம். இறந்த உறுப்பினா்களின் பெயா்களை உரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளித்து நீக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.