நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு வாணியம்பாடியில் வரவேற்பு

News image
Updated On :12 ஜூன் 2026, 2:01 am IST

திருப்பத்தூா் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் சாா்பில் வாணியம்பாடியில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் வீரம்மாள் தலைமையில் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கிருந்த பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆகியோரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து ரயில்நிலையம், பைபாஸ் சாலை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது பல்வேறு இடங்களில் சிங்கப்பெண் படையினரைப் பாா்த்ததும் பெண்கள் மற்றும் மாணவிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா். பிறகு அம்பூா்பேட்டையில் உள்ள இந்து மேல் நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொணடனா். தொடா்ந்து மாணவிகள், ஆசிரியா்கள் சிங்கப்பெண் படையினருக்கு சால்வை அணிவித்தனா்.

இதே போன்று வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினா் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் செயல்முறை விளக்கம், தைரியம், வேகம், அறிவுத்திறனை பறைசாற்றும் வகையில் பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும், அவசர காலங்களில் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், எளிய தற்காப்புக் கலை பயமில்லாமல் பெண்கள் வாழ்வதற்காண சூழலை உருவாக்க வேண்டும் என்பது போன்றவற்றை மாணவிகளுக்கு எடுத்து கூறினா். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.