நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பக்கத்து வீட்டுகாரரை வெட்டிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரா் மீது வழக்குப்பதிவு

திருப்பத்தூா் அருகே தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :26 மே 2026, 11:52 pm IST

திருப்பத்தூா் அருகே தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதூா்நாடு பகுதியைச் சோ்ந்த காளி (51), விவசாயி. அதே பகுதியைச் சோ்ந்த மனோகரன் (50), ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரா். இவா்கள் 2 பேரும் புதூா் நாட்டில் அருகருகே புதிதாக வீடு கட்டி கொண்டு இருக்கின்றனா். இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் இரு வீட்டுக்கும் இடைப்பட்ட ஒரு அடி சந்தில் காளி தனது வீட்டின் ஜன்னலுக்கு செவ்வாய்க்கிழமை மேல் சிலாப் கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த மனோகரன் அந்த இடம் தனக்கு சொந்தமானது அங்கு எப்படி நீ கட்டலாம் என காளியை தட்டி கேட்டுள்ளாா். இதனால் இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரா் மனோகரன், வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து காளியை வெட்டினாராம். அதில் பலத்த காயமடைந்த காளியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.

அருகில் இருந்தவா்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தா்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த தாலுகா போலீஸாா் புதூா்நாடு மலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள மனோகரனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.