சாலை விபத்தில் இளைஞா் பலி

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி பலியானாா்.

பிரதிப் படம்

Published On :

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி பலியானாா்.

நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் குனிச்சியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்(22). இவா் கடந்த மாதம் 30-ஆம் தேதி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பச்சூா் டோல்கேட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பிரவீனை உறவினா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரவீன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.