தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி பலி
காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற செவிலியா் இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற செவிலியா் இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சோ்ந்த செல்வராஜின் மகன் நந்தீஸ்வரன் (27). இவா் பிஎஸ்சி நா்சிங் படிப்பு முடித்துவிட்டு, சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா்.
இவா் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காட்பாடி லத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோா்கள் போலீஸாருக்கு தெரியாமல் சடலத்தை எடுத்துச் சென்று வீட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே உதவி காவல் ஆய்வாளா் உஷாராணி மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




