ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பூண்டி ஏரியில் சேதமான மதகுகளை சீரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

பூண்டி ஏரியில் சேதமடைந்த மதகுகளை சீரமைப்பதற்காக பொதுப்பணித்துறை ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Published On :


பூண்டி ஏரியில் சேதமடைந்த மதகுகளை சீரமைப்பதற்காக பொதுப்பணித்துறை ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை பெரு நகர மாநகராட்சியில் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குவது பூண்டி ஏரி. இந்த ஏரி 760 சதுர மைல் அளவில் நீர் வரத்து பரப்பளவு கொண்டதாகும். இங்குள்ள 16 மதகுகள் (ஷட்டர்கள்) ஒவ்வொன்றும் 40 அடி அகலமும், 15 அடி நீளமும் கொண்டதாகும். இந்த மதகுகள் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1.20 லட்சம் கன அடிவரையில் தண்ணீரை வெளியேற்றலாம். தற்போதைய நிலையில் கடும் வெயில் வாட்டி வருவதாலும், கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுத் திட்டத்தின் சார்பில் கண்டலேறு அணையிலிருந்து நீர்வரத்து இல்லாததாலும் ஏரி வறண்டு காணப்படுகிறது.
எனவே, வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுத் திட்டத்தில் நீரைப் பெறுவதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அடுத்த மாதத்திற்குள் கிருஷ்ணா நதிநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில், இதுவரையில் சீரமைக்கப்படாமல் இருந்த ஒரு சில மதகுகள் வழியாக தண்ணீர் கசிவும் இருந்தது. இதனால் தேக்கி வைக்கும் தண்ணீரும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனை கருத்தில் கொண்டு அனைத்து மதகுகளையும் சீரமைப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு தண்ணீர் கசிவு ஏற்படும் மதகுகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் சீரமைக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.