/

திருவள்ளூர்: அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

பொது மக்களிடமிருந்து கொள்ளையடித்து முதலாளிகளை வளமாக்கும் பா.ஜ.க அரசின் கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர் திங்கள்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
திருவள்ளூரில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்.
Updated On :9 ஆகஸ்ட் 2021, 6:08 am

DIN

பொது மக்களிடமிருந்து கொள்ளையடித்து முதலாளிகளை வளமாக்கும் பா.ஜ.க அரசின் கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர் திங்கள்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட இந்திய விவசாயிகள் தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் உழவர் சந்தை எதிரே மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். 

இதில், எல்பிஎப் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆவடி நாகூர் கனி, ஏஐடியுசி சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.கஜேந்திரன், சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 

அப்போது, மக்களிடம் கொள்ளையடித்து முதலாளிகளை வளமாக்கும் பா.ஜ.க அரசின் கொள்களை கண்டித்தும், விவசாயிகளை பாதிதக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பெறுதல், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தல், பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, தாமரைபாக்கம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 12 இடங்களில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.