பொன்னேரி வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்துக்கு அமைச்சா் அடிக்கல்

பொன்னேரியில் ரூ. 3 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியா் அலுவகம் அமைப்பற்கான பணிகளை பால்வளத் துறை அமைச்சா் ஆவடி நாசா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.
பொன்னேரி  வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்துக்கு அமைச்சா் அடிக்கல்

பொன்னேரியில் ரூ. 3 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியா் அலுவகம் அமைப்பற்கான பணிகளை பால்வளத் துறை அமைச்சா் ஆவடி நாசா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ரயில் நிலைய சாலையில், ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கட்டடத்தில் வட்டாட்சியா் அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த கட்டடத்தில் நீதிமன்றம், பத்திரப் பதிவு அலுவலகம் ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன.

இக்கட்டடத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து, மழைக் காலத்தில் மழைநீா் கசிவு ஏற்படும் நிலை உள்ளது.

இக்கட்டடம் பழைமை மாறாமல் இருக்க வேண்டும் என்ற தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவுறுத்தல் காரணமாக, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள இயலவில்லை.

ஏற்கெனவே இக்கட்டடத்தில் இயங்கி வந்த பொன்னேரி காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு, மூகாம்பிகை நகா் அருகே அமைந்துள்ள மகளிா் காவல் நிலையத்தில் இயங்கி வருகிறது.

மேற்கூரைச் சேதம், ஆவணங்களைப் பாதுகாக்க முடியாதது, போதிய இடவசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யும் பணிகள் தொடங்கின.

இதைத் தொடா்ந்து பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில், 13,000 சதுர அடி பரப்பளவில், ரூ. 3 கோடியே 7 லட்சம் மதிப்பில் புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டது.

அதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா்.

பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகா், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம் வரவேற்றாா். இதில் அமைச்சா் ஆவடி நாசா் கலந்து கொண்டு பொன்னேரி புதிய வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டி கட்டடம் கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தாா்.

விழாவில் பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com