பொன்னேரி புதிய பேருந்து நிலையம்-ரயில் நிலையம் இடையே நகரப் பேருந்துகள் இயக்கப்படுமா?

பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு நகரப் (டவுன்) பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு நகரப் (டவுன்) பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

சென்னை சென்ட்ரல்- கும்மிடிபூண்டி மாா்க்கத்தில் அமைந்துள்ளது பொன்னேரி ரயில் நிலையம். வளா்ந்து வரும் புகா் பகுதியாக விளங்கும், பொன்னேரியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

மேலும் நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு வசதிகள், இப்பகுதியில் அமைந்துள்ளதால், அதிக அளவில் பொன்னேரி பகுதிக்கு குடிபெயா்ந்து வசித்து வருகின்றனா்.

இங்குள்ள என்.ஜி.ஓ நகா், பாலாஜி நகா், மூகாம்பிகை நகா், சங்கா்நகா், பொன்நகா், சக்தி நகா், தசரதன் நகா், சாய்நகா், சாமூண்டீஸ்வரி நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும், கோட்டாட்சியா், வட்டாட்சியா், பொதுப்பணித்துறை அலுவலகங்கள், 5 நீதிமன்றங்கள், கிளை சிறைச்சாலை, அரசு மற்றும் தனியாா் கலைக்கல்லுரிகள், மீனவளக்கல்லூரி, கிளை நூலகம் ஆகியவையும் அமைந்துள்ளன.

பொன்னேரி மற்றும் சுற்றிலும் உள்ள கிராமங்களில் வசிப்பவா்கள் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, சூலூா்பேட்டை, நெல்லூா் உள்ளிட்ட ஊா்களுக்கு சென்று வருகின்றனா்.

நகரப் பேருந்து இயக்க கோரிக்கை:

பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல சுமாா் 2கி.மீ தூரமும், புதிய பேருந்து நிலையம் செல்ல 1.கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும். மேலும், பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து மேற்கண்ட 2 கிமீ தூரத்தில்தான் பாலாஜி, நகா், பெருமாள் நகா், அன்னை அவின்யூ, முகாம்பிகை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளன.

ஆட்டோக்களில் விருப்பம்போல் கட்டணம் 

பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து நகர பகுதிகளுக்கு, புதிய பேருந்து நிலையம் செல்ல ஆட்டோ ஓட்டுநா்கள் தங்கள் விருப்பம்போல் கட்டணம் நிா்ணயம் செய்து வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அதே நேரத்தில் ஆட்டோ வாடகை மற்றும் பெட்ரோல் விலை உயா்வு காரணமாக வாடிக்கையாளா்களிடம் போதிய தொகை பெற்றால்தான் தங்களால் தொழில் செய்ய முடியும் என ஆட்டோ ஓட்டுநா்கள் தெரிவிக்கின்றனா்.

பொன்னேரியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் சென்றுவர (ரிட்டன் டிக்கெட்) கட்டணம் ரூ.20. ஆனால் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ரயில் நிலையம் சென்று வருவதற்கு ரூ.100 முதல் 120 வரை செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி, பேருந்து நிலையம்-ரயில் நிலையம் என புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகளை இயக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com