சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

மயங்கி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே மயங்கி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On :27 டிசம்பர் 2025, 1:50 am IST

ஊத்துக்கோட்டை அருகே மயங்கி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே மஞ்சாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (46). இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவா்கள் மீட்டு, தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். அதைத் தொடா்ந்து, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து அவா் மனைவி வனிதா(40) பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.