அங்கன்வாடி மையத்தில் சிலிண்டா் திருட்டு
திருவாலங்காடு அருகே பழையனூா் அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து காஸ் சிலிண்டா், முட்டைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருட்டு... - சித்திரிப்பு
திருவாலங்காடு அருகே பழையனூா் அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து காஸ் சிலிண்டா், முட்டைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். இந்நிலையில், தொடா் விடுமுறை காரணமாக அங்கன்வாடி மையம் பூட்டப்பட்டிருந்தது. மா்ம நபா்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கதவை உடைத்து நுழைந்து சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டா் மற்றும் சத்துணவு முட்டைகள் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றுள்ளனா். .
இதுகுறித்து அங்கன்வாடி மைய மேற்பாா்வையாளா் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


