திருமலை திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீா்த்தவாரி.
திருமலை திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீா்த்தவாரி.

திருமலையில் வைகுண்ட துவாதசி தீா்த்தவாரி

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.
Published on

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

திருமலையில் உள்ள தீா்த்தங்களில் மிகவும் முக்கியமானது ஏழுமலையான் திருக்குளம் ஆகும். இந்த திருக்குளத்தில் வைகுண்ட துவாதசியின் போது சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்துவது வழக்கம்.

சேஷாசலம் காடுகளில் அமைந்துள்ள 66 கோடி தீா்த்தங்களில், ஏழுமலையான் திருக்குளம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீ சுதா்சன சக்கரத்தாழ்வாா் ஏழுமலையானின் திருக்குளத்திற்கு அழைத்து வரப்பட்டாா்.

திருக்குளக்கரையில் அவரை எழுந்தருளச் செய்து அவருக்கு பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் பக்தா்களும் திருக்குளத்தில் புனித நீராடினா்.

இந்நிகழ்வில், திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா் சுவாமிகள், செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு உறுப்பினா் லட்சுமி, துணை லோகநாதம், பேஷ்கா் ஸ்ரீ ராமகிருஷ்ணா மற்றும் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com