
அண்ணன் மீது தாக்குதல்: தம்பி கைது
போளூரை அடுத்த பெலாசூர் ஊராட்சியில் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனைத் தாக்கியதாக தம்பியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
போளூரை அடுத்த பெலாசூர் ஊராட்சியில் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனைத் தாக்கியதாக தம்பியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பெலாசூர் ஊராட்சியில் வசிப்பவர்கள் பரசுராமன் மகன்கள் பழனி, தசரதன். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பொதுவான ஒரு பம்புசெட் உள்ளதாம்.
இந்த பம்புசெட் மூலம் அண்ணன் பழனி (50) தண்ணீர் பாய்ச்சியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவரை அவரது தம்பி தசரதன் (40) கத்தியால் தாக்கினாராம்.
இதுகுறித்து போளூர் காவல் நிலையத்தில் பழனி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து தசரதனை கைது செய்தனர்.
பலத்த காயமடைந்த பழனி போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




