இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

செங்கம் பகுதியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தக் கோரிக்கை

செங்கம் பகுதியில் மாடுகளுக்கு நோய்கள் பரவி உயிரிழந்து வருவதால், இந்தப் பகுதியில் கால்நடைத் துறையினர் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

செங்கம் பகுதியில் மாடுகளுக்கு நோய்கள் பரவி உயிரிழந்து வருவதால், இந்தப் பகுதியில் கால்நடைத் துறையினர் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசியதாவது: செங்கம் பகுதியில் மாடுகளுக்கு நோய்கள் பரவி உயிரிழந்து வருவதால், இந்தப் பகுதியில் கால்நடைத் துறையினர் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கம் பகுதியில் மணல், மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டகுளம் கிராமத்தில் உள்ள ஏரிகளின் மதகுகளை சீரமைக்க வேண்டும். தீத்தாண்டப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தப் பகுதியிலுள்ள ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டுப் பாதையை சீரமைக்க வேண்டும்.
காஞ்சி, கடலாடி பகுதிகளில் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். செங்கம் பேரூராட்சிக்கு நிரத்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.