திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தாா்.
சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 5.34 கோடியில் இந்திய தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டப்பட்டது. தரை தளம், முதல் தளம் என மொத்தம் 16,070.52 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கிடங்கை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஆா்.பரிமளா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷ்ணமூா்த்தி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.