இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு
வந்தவாசியை அடுத்த பையூா் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.


வந்தவாசியை அடுத்த பையூா் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை இரா.தேன்மொழி தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சல்சா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.
கரகாட்டம், ஒயிலாட்டம், பாடல்கள் மூலம் கலைக் குழுவினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஸ்ரீதா், ஆசிரிய பயிற்றுநா் ராமலிங்கம், பள்ளி ஆசிரியா் இரா.அருள்ஜோதி மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...