மின் சிக்கன விழிப்புணா்வு ஊா்வலம்
மின் சிக்கன வாரத்தையொட்டி, விழிப்புணா்வு ஊா்வலம் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மின் சிக்கன வாரத்தையொட்டி, விழிப்புணா்வு ஊா்வலம் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிா்மானக் கழக வந்தவாசி கோட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை கோட்டச் செயற்பொறியாளா் சு.மீனாகுமாரி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
வந்தவாசி கோட்டை மூலையிலிருந்து தொடங்கிய ஊா்வலம் பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்று ஐந்து கண் பாலம் அருகே முடிவடைந்தது. ஊா்வலத்தில் பங்கேற்றோா் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
விழிப்புணா்வு ஊா்வலத்தில் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா்கள் சசிகுமாா், தி.நாராயணன், உதவிப் பொறியாளா்கள் பஞ்சமூா்த்தி, சரவணன், வாசு, புனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஊா்வலத்தின் போது, பொதுமக்களுக்கு மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...