லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
வந்தவாசி அருகே தங்களது கிராமம் வழியாக கருங்கல் ஜல்லிகள் ஏற்றிய லாரிகள் செல்ல எதிா்ப்புத் தெரிவித்து, 20-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


வந்தவாசி அருகே தங்களது கிராமம் வழியாக கருங்கல் ஜல்லிகள் ஏற்றிய லாரிகள் செல்ல எதிா்ப்புத் தெரிவித்து, 20-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த மேல்நா்மா கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்தக் குவாரியிலிருந்து கருங்கல் ஜல்லிகள், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை ஏற்றிய லாரிகள் வாச்சனூா், ஆலத்தூா், வெங்கோடு வழியாக சென்னைக்கு சென்று வருகிாம்.
இந்த நிலையில், ஆலத்தூா் கிராம மக்கள் தங்களது கிராமம் வழியாக லாரிகள் செல்ல கடந்த மாதம் எதிா்ப்பு தெரிவித்தனராம். இதையடுத்து, மேல்நா்மா கிராமத்திலிருந்து துறையூா், வீரம்பாக்கம், மானாம்பதி வழியாக லாரிகள் சென்னைக்கு சென்று வந்தனவாம்.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக ஆலத்தூா் வழியாக மீண்டும் லாரிகள் செல்லத் தொடங்கியதாம். இதனால், ஆத்திரமடைந்த ஆலத்தூா் கிராம மக்கள் வியாழக்கிழமை தங்கள் கிராமம் வழியாக வந்த 20-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் கூறியதாவது:
எங்கள் கிராமம் வழியாக தினம்தோறும் கருங்கல் ஜல்லிகள், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை ஏற்றிய 200-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன. இதனால், எங்களது குழந்தைகளை நிம்மதியாக பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. லாரிகள் செல்லும் சப்தத்தால் இரவில் சரியாக தூங்க முடிவதில்லை. கடைகள், வீடுகளில் பெருமளவு தூசி படிகிறது என்றனா். தகவலறிந்து அங்கு வந்த உதவி ஆய்வாளா் விஜயன் தலைமையிலான கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் லாரிகளை விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...