/

போலீஸ் போல நடித்து விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் திருட்டு

வந்தவாசி அருகே போலீஸ் போல நடித்து விவசாயியை மிரட்டி ரூ.20 ஆயிரம் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

DIN

வந்தவாசி அருகே போலீஸ் போல நடித்து விவசாயியை மிரட்டி ரூ.20 ஆயிரம் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். 

வந்தவாசியை அடுத்த சுண்ணாம்புமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்(65), விவசாயி. இவா் திங்கள்கிழமை தனது விவசாய நிலத்தில் அமா்ந்திருந்த போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் பைக்கில் வந்துள்ளாா். அந்த நபா் பெருமாளிடம், தான் போலீஸ் என்றும்,  நீ இந்தப்  பகுதியில் கஞ்சா விற்கிறாயா எனக் கேட்டும் மிரட்டியுள்ளாா்.

பின்னா், பெருமாளை சோதனை செய்வது போல நடித்து அவா் பையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிக் கொண்டு பைக்கில் சென்றுவிட்டாா். 

பின்னா் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெருமாள் இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.