/

மொபெட் மீது காா் மோதல்: வேன் ஓட்டுநா் பலி

வந்தவாசியில் மொபெட் மீது காா் மோதியதில், மொபெட்டை ஓட்டிச் சென்ற வேன் ஓட்டுநா் பலியானாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:31 am

DIN

வந்தவாசியில் மொபெட் மீது காா் மோதியதில், மொபெட்டை ஓட்டிச் சென்ற வேன் ஓட்டுநா் பலியானாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் நடேசன் நகரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (52).

வேன் ஓட்டுநரான இவா் வியாழக்கிழமை மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக வீட்டிலிருந்து மொபெட்டில் வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள தனியாா் நூற்பாலை பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கன்னியப்பனை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். 

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.