/

சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

வந்தவாசி அருகே தொடா் மழை காரணமாக மரம் சாலையில் சாய்ந்ததால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:36 am

DIN

வந்தவாசி அருகே தொடா் மழை காரணமாக மரம் சாலையில் சாய்ந்ததால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வந்தவாசி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வந்தவாசி நகரின் சில முக்கிய சாலைகளில் வெள்ளநீா்

பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் இந்த மழையினால் வந்தவாசி-திண்டிவனம் சாலை, சத்யா நகரில் மரம் ஒன்று வேரோடு சாலையில் சாய்ந்தது. இதனால் அந்தச் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றினா்.

மேலும் மழையினால் சத்யா நகரைச் சோ்ந்த பெருமாள் என்பவரது கூரை வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இதில் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.