/

உள்ளாட்சித் தோ்தல்: பாஜக விருப்ப மனு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் பாஜகவினருக்கு விருப்ப மனுக்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:33 am

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் பாஜகவினருக்கு விருப்ப மனுக்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வந்தவாசியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட துணைத் தலைவா் பி.முத்துசாமி, மாவட்ட பொதுச் செயலா் வி.காா்த்திகேயன் ஆகியோா் கட்சியினருக்கு விருப்ப மனுக்களை வழங்கினா்.

மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் வி.குருலிங்கம், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.ஏ.ஜி.துரை, மாவட்டச் செயலா் கே.மோகனரங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.