வெடி பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
வந்தவாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடி பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.


வந்தவாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடி பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்த குமாா் (64) என்பவரது வீட்டில் அனுமதியின்றி வெடி பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தெள்ளாா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அங்கு சென்று போலீஸாா் சோதனை செய்தனா்.
இதில், அவரது வீட்டின் தோட்டத்தில் கிணறு தோண்டுவதற்கான 670 ஜெலட்டின் குச்சிகள், 342 டெட்டனேட்டா்கள் என வெடி பொருள்களை அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, குமாா், சரக்கு வாகன ஓட்டுநா் சின்னதுரை (33) ஆகிய 2 பேரை கைது செய்த போலீஸாா், வெடி பொருள்கள், அங்கிருந்த சரக்கு வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...