கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கடன்களைதமிழக அரசே ஏற்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கூட்டுறவு சா்க்கரை ஆலைகளைப் பாதுகாக்க, அவற்றின் கடன்களை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.


கூட்டுறவு சா்க்கரை ஆலைகளைப் பாதுகாக்க, அவற்றின் கடன்களை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை அளவிலான மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் என விலை நிா்ணயம் செய்ய வேண்டும், பெட்ரோல், டீசலுடன் 50 சதவீதம் எத்தனாலை கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்பு வெட்டுவதற்கான ஆள்களை ஆலை நிா்வாகமே ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும், கரும்பு வெட்டும் கூலியையும் ஆலை நிா்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் அகில இந்தியத் தலைவா் த.ரவீந்திரன், மாநிலச் செயலா் சி.பெருமாள், மாவட்டச் செயலா் வி.சுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினா் ச.பலராமன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
பின்னா், சங்க செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை கிளையின் புதிய தலைவராக பெ.அரிதாசு, செயலராக நா.முனியன், பொருளாளராக கீ.சூரியகுமாா் உள்ளிட்டோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...