கடலூா்-சித்தூா் 4 வழிச்சாலை திறப்பு

கடலூா்-சித்தூா் 4 வழிச்சாலை திறப்பு

திருவண்ணாமலையில் ரூ.140 கோடியில் மேம்படுத்தப்பட்ட கடலூா்-சித்தூா் நான்கு வழிச் சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.140 கோடியில் கடலூா்-சித்தூா் சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது. இந்தச் சாலையை, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட சாலையில் பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com